புதுக்கோட்டையில் இந்திய சித்தா ஆயுர்வேத முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு தினமும் யோகா மற்றும் வர்மக்கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா நோய்களுக்கு ஆங்கில மருத்துவ முறையிலும் இந்திய மருத்துவ முறையான சித்த மற்றும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதேபோல் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்திய மருத்துவ முறையான சித்த மற்றும் ஆயுர்வேத முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களுக்கு அங்கு பாரம்பரிய முறையான மூலிகை மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது ஆவி பிடித்தல் தூபம் புகை மூலமாக சிகிச்சை அளித்தல் ஆகிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறது மேலும் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி யோகா ஆகியவை தினமும் வழங்கப்படுகிறது இதே காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் யோகா மருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களுக்கு நடனமாடி யோகா மற்றும் வர்மக்கலை மூலமாக பயிற்சி அளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
தற்போது மாவட்டத்தில் சித்த மருத்துவ முறையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது