கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்தநிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனை அடுத்து கோவையிலிருந்து சென்னை, மயிலாடுதுறை ஆகிய நகரங்களுக்கு இன்று 6:15 மணிக்கு சென்னைக்கும், 7:15 மணிக்கு மயிலாடுதுறைக்கு முதல் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.