தமிழக சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது விபத்து காலம் முதல் பிரசவம் வரை அனைத்து வகை நோயாளிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணியை செய்து வருகிறது
சுகாதாரத்துறை சார்பில் செயல் படுத்தப்பட்டாலும் இது emri என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது
இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் அழைத்தால் அவை தற்போது சென்னையில் உள்ள தலைமை கால் சென்டருக்கு சென்று அங்கிருந்து பின்னர் அந்தந்த பகுதிகளுக்கு அவர்கள் மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது சேவை என்பது அனுப்பி வைக்கப்படும்
இதில் சில கால தாமதம் இருப்பதால் சென்னையில் இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் கால் சென்டரின் கிளையை புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்குவதற்கு முதல்வரிடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் புதுக்கோட்டையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது தற்போது பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இந்த பயிற்சி அளிக்கப்படும் பணியையும் கால் சென்டர் அமைக்கும் பணியையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது ஆய்வு செய்து பணியாளர்களிடம் 108 சேவை எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்
சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் தொடங்கப்படுவது புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் பல பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கருதப்படுகிறது