கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள். பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்ததோடு, காலி இடத்தையும் அபகரித்து விட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் எதிர்புறம் வசித்து வந்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மளிகை கடை நடத்த ஒரு லட்ச ரூபாய் போக்கியத்திற்கு வேண்டுமென்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது மகன் மற்றும் மகளிடம் கேட்டு சொல்வதாக மூதாட்டி கூறியிருந்தார். இந்நிலையில் மூதாட்டி தன்னிடம் 50,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கி உள்ளதாகவும், உடனடியாக அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தன்னை ஏமாற்றி கை நாட்டு பெற்றதாக மனுவில் தெரிவித்து இருந்தார். மேலும் 50 ஆயிரம் ரூபாய் தன்னிடம் கொடுத்த ஆறுமுகம் இரண்டு செண்ட் வீட்டையும் ஒரு வார காலத்திற்குள் எழுதி தரும்படி கட்டாயபடுத்தவே போகியத்திற்கு தானே இடம் கொடுத்தேன் என்று கேட்டபோது நான் விற்று விட்டதாக என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆறுமுகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை தரை மட்டம் செய்ததாக குற்றம் சாட்டி இருந்த கண்ணம்மா இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அரசியல் பிரமுகர் என்ற காரணத்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது மகள் ராணி ஆறுமுகம் மற்றும் அவரது மகனிடம் கேட்டபோது அவர்கள் மகளை தாக்கியதுடன், சாதி ரீதியாக திட்டியதாகவும் , தனது அறியாமையை பயன்படுத்தி வீட்டை இடித்து நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் மனு அளித்து இருந்தார்.இவ்வழக்கு தொடர்பாக மதுக்கரை காவல் துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் கிரீஸ்கேசன் மீது இந்திய தண்டனை சட்டம் காயம் ஏற்படுத்துதல்,
கொலை மிரட்டல், பட்டியல் வகுப்பை சேர்ந்தவரின் வீட்டை இடித்தல்,சாதியின் பெயரை பயன்படுத்தி திட்டுதல் மற்றும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிறுபிக்கபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்புள்ளதாக தெரிகிறது. மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை அபகரித்து சாதியின் பெயரை சொல்லி திட்டி வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.