கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்தது. நேற்று இரவில் 9.10 மணியிலிருந்து தொடர்ந்து 20 மணி நேரமாக இன்று மாலை 5.30 வரை நடைபெற்றது. இறுதியாக மீட்பு பணியில், 65 வயதுடைய கஸ்தூரி அம்மாள் என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார், மண்ணில் முழுமையாக புதைந்த நிலையில் மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர், கட்டிட இடிபாடுகளில் 8 பேர் சிக்கியிருந்த நிலையில் 6 பேரை உயிருடன் மீட்டனர். 3 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டார்கள். உயிருடன் மீட்க பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி கோபால்சாமி-கஸ்துரிம்மாள், 6 வயதுடைய சிறுவனின் தாய் ஸ்வேதா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.