திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் தங்கும் விடுதி ஆகிய கட்டிடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்,
இதையடுத்து அந்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்ட உள்ளது, இதனால் அங்கு தங்கி பயின்று வந்த செவிலியர்கள் தங்கி பயில்வதற்கு ஏதுவாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடத்தை மறு சீரமைத்து செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது, இந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இன்று திறந்து வைத்தார்
இதில் அரசு அதிகாரிகள் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்