கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள் இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாகவும், பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும் முறையான சாட்சிகளை கொண்டு விசாரணை செய்து சொத்தை மீட்டுத் தர வேண்டும் இல்லையெனில் வாழ்வாதாரம் இன்று தவிக்கும் தன்னையும் தனது மகள் மூவரையும் கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு கூறி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என கூறியதுடன் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறிய முருகம்மாள் பாட்டிக்கு 100 ரூபாய் பணம் அளித்தவர் இதனை உணவு மற்றும் பேருந்து செலவிற்கு தற்போது வைத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். மனு அளிக்க வந்த பாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.