ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு தமிழகத்தில் அம்மாவின் ஆசியுடன் எடப்பாடியார் மூலம் சிறந்த முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. வயதான பயனாளிகளாகிய தாங்கள் நேஷனல் வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிய முறையில் பணம் பெற வேண்டி இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்பது உட்பட ஆட்சியின் சிறப்பை பற்றி பேசினார்.
பின்னர் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையான ரூ 1000 வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன், பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் உட்பட அரசு உயர் அதிகாரிகள் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், பயணாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி செய்தியாளர் கண்ணன்