கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸ் கட்சியல் சேர்க்கும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும்
படிவத்தினை கிழக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி உத்தரவின்படி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலமையில் காங்கிரஸ் கட்சி அதுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைப்பெற்றது
இந்த சிறப்பு முகாமின் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுடுத்த ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் படிவங்கள் முழுவதிலும் அன்னை சோனியா காந்தியின் கரத்தினை வலு செய்யும் வகையில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் வதியுறுத்தினார்..
இதனையடுத்து உறுப்பினர் படிவங்களை ஆர்வத்துடன் காங்கிரஸ் கட்சியின் பெறுப்பாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் ,
அப்போது கிருஷ்ணகிரி வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம்,
நகர தலைவர் வின்சென்ட், ராஜீவ்காந்தி போர்படை தளபதி ராமச்சந்திரன், காவேரிப்பட்டினம் வட்டாரத் தலைவர் ராமன், ஜெயவேல் மேற்கு வட்டாரத் தலைவர் கோபால்கிருஷ்ணன்,
மாவட்டச் செயலாளர்கள் கோவிந்தன், முனுசாமி நாயக்கர், சத்திவேல் , கலைப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், சமூக ஆர்வலர் டோனியில் சக்கரவர்த்தி, கிருஷ்ணகிரி இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற செயலாளர் சென்னப்பன், மாவட்ட மகளிர் அணி பெறுப்பாளர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.