கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூா் மலைபாதையின் வனத்துறை சோதனை சாவடி வழியாக பான்மசாலா குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி சரக்கு வாகனத்தையும் சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பங்களாபுதூா் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடகா மாநிலம் கோலிபாளையத்திலிருந்து கடம்பூா் மலைப்பாதை வழியாக மதுரைக்கு புகையிலை பொருட்களை கடத்திச்செல்ல முற்பட்ட போது பிடிபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தொியவந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சோ்ந்த மினி சரக்கு வாகன ஓட்டுநா் செந்தில்குமாரை கைது செய்துள்ள பங்களாபுதூா் காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.