அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பிரம்மதேசம், பச்சாம்பாளையம் கிராம ஊராட்சியை சேர்ந்த 97 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான உத்தரவு நகல் மற்றும் 27 நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கினார்.
பிரம்மதேசம் கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி, அந்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் வட்டாட்சியர் மாலதி தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அதிகாரிகள் சதீஷ்குமார், ரமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.