ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரிச்சேரி, புன்னம், பருவாச்சி, மயிலம்பாடி, தொட்டிபாளையம், வரத நல்லூர், சன்னியாசிப்பட்டி, ஆண்டிக்குளம், குருப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக ஜல் ஜீவன் மிஷன் (தனிநபர் இல்ல குடிநீர் வசதி அமைத்தல்) தார் சாலை அமைத்தல், சிறு பாலம் கட்டுதல், சாலை மேம்பாடு செய்தல், கான்கிரீட் தளம் அமைத்தல், வடிகால் அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுதல், காம்பவுண்ட் சுவர் கட்டுதல், பால் சேகரிக்கும் மையம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் ரூ.15.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் பூமிபூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அதிமுக பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேலு, பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி உட்பட அரசு உயர் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர்
ஜி. கண்ணன்