திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு 6 நல்ல ஆசிரியர்களுக்கான விருதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆக இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தை தன்னிச்சையாக இயங்க இணைய தளத்தையும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் முன்னிலையில் பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் கே சி வீரமணி துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியாற்றி இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது. அதற்கு அடையாளமாக வருடம் தோறும் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்து பணியாற்றிய ஆசிரியர்களை தேர்வு செய்து நல்ல ஆசிரியருக்கான விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்களை சென்னைக்கு ஒரே இடத்தில் வரவழைத்து விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
தற்போது நோய்த்தொற்று காலகட்டம் என்பதால் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் விருது வழங்கும் விழாவை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்து பணியாற்றிய குழந்தைசாமி தலைமை ஆசிரியர் குநிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பொற்செல்வி முதுகலை ஆசிரியர் மேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர், ஜை புண்ணிசா தலைமை ஆசிரியர் நகராட்சி முஸ்லிம் மற்றும் நடுநிலைப்பள்ளி வாணியம்பாடி, சகாயம் இடைநிலை ஆசிரியை மேரி இமாகுலேட் மற்றும் நடுநிலை பள்ளி திருப்பத்தூர், ஷரீபாபானு தலைமை ஆசிரியர் ஹஸ்ணத் நிஜரியா நிதியுதவி தொடக்கப்பள்ளி ஆம்பூர், பிரபுதாஸ் மலர்வெந்தன் தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மூப்பற்காலனி பெறநாம்பட்டு ஆகிய 6 ஆசிரியர்களை தேர்வு செய்து தமிழகத்தின் நல்லாசிரியர் விருதை வழங்கினார்கள்.
அதனுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆக இயங்கிக் கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் இன்று முதல் தன்னிச்சையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆகவே இயங்க இணையதளம் துவங்கப்பட்டு 5 துணை ஆட்சியர் களுக்கான வாகனம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதன், திருப்பத்தூர் பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன், வாணியம்பாடி பள்ளி துணை ஆய்வாளர் தன்ராஜ், மற்றும் பல்வேறு பள்ளிக் கூடத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .