நான் என் வழித்தடத்திலும் என் வாழ்வு இடத்திலும் வசித்து வந்தேன் மக்களாகிய நீங்கள் உங்களால் காடுகள் சிறிது சிறிதாக அளிக்கப்பட்டு வருகிறது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது நாங்கள் எங்கள் பசியை போக்க உங்களால் பயிரிடப்படும் விவசாயத்திற்கு வந்தது தவறு தான் எங்களை நீங்கள் விரட்டும் விதம் நிறைய உள்ளது அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை ஆனால் உங்களில் சில மனிதாபிமானம் இல்லாத கொடூரமான செயலை செய்யக் கூடிய நபர்களால் அவுட் காய் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தது அதன் மேல் நாங்கள் விரும்பி உண்ணும் உணவை வைத்து எங்களை ஏமாற்றுவதும் இல்லாமல் நாங்கள் அந்த வெடி விபத்தில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்து இருந்தால் அதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுவதில்லை,
எங்கள் தவறுக்கு தண்டனை என்று சென்றிருப்போம் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை அனுபவித்து கடைசியில் இழப்பை சந்தித்தது வேதனை அளிக்கிறது நாங்கள் உங்கள் வீட்டுக்குள் புகுந்து அராஜகம் செய்ய ஆசைப்படவில்லை , எங்கள் பசியை போக்க காட்டில் உணவில்லை என்றால் உங்களிடம் கையேந்தும் நிலை வந்துவிட்டது., எங்களால் காட்டுக்குள் சென்று அடிபட்ட காயத்துடன் எந்த மரக்கிளையும் தாவரங்களும் உன்ன இயலவில்லை ஆகவே தான் எங்களால் நீங்களும் பாதிக்கப்படுகிறீர்கள், அடிபட்ட பிறகு எங்களை காப்பாற்ற துடிக்கும் நீங்கள் அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால்,
குறை கூறவில்லை ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை விரல்கள் வேறுபட்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சில மனசாட்சி இல்லாத தன் சொந்த லாபத்துக்காக கொடூரமான குணத்தைக் கொண்ட இவர்களால் எங்கள் இனம் அழிந்து போகாமல் காப்பாற்றுங்கள், என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது. நீங்கள் உயிர் வாழ்வதற்கு அவசியம் இயற்கை, இயற்கை சூழ்ந்த அனைத்தும் எங்களை வாழவிடுங்கள் உங்களையும் வாழ வைக்கிறோம், நான் இறுதியாக இறுதி மூச்சில் மக்களாகிய உங்களிடம் கடைசி ஆசையாக கேட்டுக்கொள்வது நான் பெற்ற துன்பம் எங்கள் இனம் இனி பெற வேண்டாம் அவுட் காய் என்ற சகாப்தம் என்னோடு முடியட்டும் எங்கள் உறவுகளை வாழவிடுங்கள் என்றும் அன்புடன் என் இறுதி மூச்சு உடன் என் வேண்டுகோளை முடித்துக் கொள்கிறேன் மக்கள் அனைவராலும் மக்னா என்று அழைக்கப்படும் காட்டுயானை நன்றி.