புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் இடி தாக்கியதில் ஆறுமுகம் என்ற 70 வயது முதியவர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேல்மங்கலம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ஆறுமுகம் என்ற முதியவர். இவரும் சன்னாசி என்பவர் மனைவி பாப்பு என்பவரும் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்புாது திடீரென இடி தாக்கியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த பாப்பு என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி