ஓட்டுக்கு எப்படி 2000 ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்கள் அதே போல் தான் டீ.சர்ட்டுக்கும் ஒரு விலை வைத்து அதை வாங்கி நடிகர்கள் அணிந்துள்ளனர் இந்த விஷயத்தை அவ்வாறாகவே பார்க்கவேண்டும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கண்டிக்கத்தக்கது பாஜக எப்போதும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் புதுக்கோட்டையில் பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராமன் செய்தியாளர்களுக்கு சந்திப்பு.
பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு சென்ற காயத்ரி ரகுராமன் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:- தமிழ் மொழி பேசும் இந்தியன் இந்தி தெரியாது என்று நடிகர்கள்தான் டீ சர்ட் போட்டுள்ளனர் ஓட்டுக்கு எப்படி 2000 ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்கள் அதே போல் தான் டீ.சர்ட்டுக்கும் ஒரு விலை வைத்து அதை வாங்கி நடிகர்கள் அணிந்துள்ளனர் இந்த விஷயத்தை அவ்வாறாகவே பார்க்கவேண்டும், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கத்தக்கது பாஜக என்றுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருக்கும், திரைத்துறைக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கலைஞர்களுக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது தற்போது பல பேர் கொரோனா ஊரடங்கும் பாதிப்புக்குள்ளாகி வந்த சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, முதலில் உடல் நிலையை பார்த்துவிட்டு தான் திரைத்துறையில் கூடுதல் தளர்வுகளைப் பற்றி யோசிக்க வேண்டும், திரையரங்கில் படம் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் படம் வெளியிடுவது அந்தந்த தயாரிப்பாளர்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.