பர்கூர் கிராம ஊராட்சியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில், 13 லட்சம் மதிப்பீட்டில் பர்கூர் ஊராட்சியில் உள்ள 264 பயனாளிகளுக்கு, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாதிச்சான்றிதழ், சொட்டுநீர் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அந்தியூர் வட்டாட்சியர் மாலதி, பர்கூர் கிராம நிர்வாக அதிகாரிகள் முருகேசன், முனியப்பன் மற்றும் வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை உட்பட பல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.