ஓசூரில் நேற்று இரவு
அத்திப்பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் செல்போன் பறித்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கர் என்பவரை நகர போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் ரொக்கப்பணம் விசா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்
கொடைக்கானலில் இருந்து புட்டபர்த்தி செல்ல ஓசூர் வந்து இறங்கிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ரூத் அலெக்ஸாண்டர் 65 வயது மூதாட்டியை ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் அப்பெண்ணிடமிருந்த செல்போன் ரொக்கப்பணம் விசா ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்
இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூக்கண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கர் என்பது என தெரிய வந்தது, இவர் மீது ஏற்கனவே கொலை , கொள்ளை வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைதானவர் , அவரை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்து ரொக்கப் பணம் 3000 விசா செல்போன் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர் , பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்,
இந்த சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்க்குள் DSP – முரளி அவர்கள் உத்தரவின் பெயரில் SI. செல்வராகவன், Sl.முன்ராஜ், அப்துல் , அழகர், பிரபாகர், காளிதாஸ் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி செய்தியாளர் ரிஸ்வான்