திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அஜித் (22) இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில் கடந்த மாதம் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த இவர் மீண்டும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் 17 வயது மைனர் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியும், மைனர் பெண்ணின் புகைப்படத்தை தன்னோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு அஜீத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் திமுக தகவல் தொழிநுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் அஜீத் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அஜீத் மீது போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் புகைப்படங்களில் அஜீத்துடன் உள்ள ராமன் மற்றும் சுதன் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு கொலை வழக்கில் கூலிப்படையாக செயல்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.