ஈரோட்டில் தி.மு.க. நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலும், செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்படும் ஜமக்காளம் பெட்ஷீட் துண்டு போன்றவைகளை உடனடியாக கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
கொரோனா காலங்களில் வேலை இழந்து தவிக்கும் நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் உடனடியாக நூல் வழங்க வேண்டும். மேலும், அவர்களை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நெசவாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். நெசவாளர் வாழ்வாதாரத்திற்காக
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் ரிப்பீட் மானிய தொகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தராமல் இழுத்தடித்து வரும் அரசின் நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்த நிலையில் இருந்து காப்பாற்றப் பட வேண்டும். என்ற காரணத்தினால் உடனடியாக மானிய தொகையை அரசு விடுவிக்க வேண்டும். நெசவாளர்களுக்கு தலா ரூ. 5,000 கொரோனா கால நிதியாக வழங்க வேண்டும்.
நெசவுத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் இலவச மின்சாரம் குறிப்பிட்ட அளவிற்கு தரவேண்டும்.
என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர்
பள்ளிப்பட்டு நாகலிங்கம், மாநில நெசவாளர் அணி செயலாளர்களான காஞ்சிபுரம் அன்பழகன், பரணி, மணி மற்றும்
மாநில நெசவாளர் அணி செயலாளர் நெல்லை பெருமாள், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் கே. சரவணன், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ். எஸ். சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர் ஜி. கண்ணன்