பழைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்கம் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் G.M. மில் பகுதியில் இரவு நேரத்தில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அதேபோல் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கவுண்டம்பாளையம், தடாகம் ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்று வந்தது.
மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பற்றிய எவ்வித விபரங்கள் அறியாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவுப்படி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா , மற்றும் விஜய் கார்த்திக்ராஜா ஆகியோர் மேற்பார்வையில்,
பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் துடியலூர் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம், , உதவி ஆய்வாளார்கள் பிராங்ளின், ஆனந்தகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சாஜஹான், லூர்து, தலைமைக்காவலர்கள் ரஞ்சித், அனந்தீஷ்வரன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் காவலர்கள் ஹரிஹரன், நவீன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும் சம்பவம் இடங்களில் கிடைத்த பல்வேறு தடைகளை அடிப்படையிலும் , சிறையில் இருந்து வந்த கைதிகளின் விவரங்களின் சேகரித்தும் விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட கொலை வழக்குகளில் பழைய குற்றவாளிகளான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தி என்கின்ற நந்தகுமார் ஆகிய இருவர்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் அந்த குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் கோவை இடையார்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒரு செயின்பறிப்பு தொடர்பான வழக்கில் மேற்கண்ட இரு குற்றவாளிகளையும் தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களுக்கு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளதும். கடந்த 2015 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த 150 சவரன் வழிபறி கொள்ளையில் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணைக்கு பிறகு அவர்களிடமிருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர அருளரசு பாராட்டுகளைக் தெரிவித்தார்.