புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து செய்தி எழுதுவதில் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் இடையே அடிதடி ஏற்பட்டதால் தாக்குதலுக்குள்ளானபாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி நகரில் வாகைமரம் பஸ் ஸ்டாப் அருகே தாக்குதலுக்குள்ளான அறந்தாங்கி நகர பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் முக்கிய சாலையான பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து வந்த அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கையை புகாராக காவல்துறையிடம் அளிக்கக்கோரி கேட்டுக் கொண்டதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் மனு எழுதி சம்பவ இடத்திலேயே உதவி ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில் புகார் மனு அளித்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்ற உடன் சாலையில் போக்குவரத்தை சரி செய்ய அறந்தாங்கி நகர காவல்துறையினர் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.