முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க கோரியும் புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட கைதிகளை பாரபட்சமின்றி விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தையின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுவிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், இதில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம் உள்ளிட்ட சிறைக் கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும் அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.