தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் ராமநாதபுரம்,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது இதனால் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு செல்ல முடியாததால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் 63 வது நினைவு நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்
மேலும் வவுனியா கபடி குழுவின் சார்பில் 63 வது குருபூஜை என்றதால் 63 பேருக்கு இலவசமாக பொங்கல் பானை வழங்கினார் மேலும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் உருவப்படத்திற்கு நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் சி.முருகேசன்