கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த 38 பேருக்கு வீட்டு மணை பட்டாவை வழங்கிய பின் பெரியகொடிவேரி பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையை திறந்து வைத்து விவசாயிகளுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது.,
மலைவாழ் மக்கள் வசிக்கும் வனப்பகுதி கிராமமான
விளாங்கோம்பையில்
வனத்துறையின் மூலமாக பள்ளி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விளாங்கோம்பை வனப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு செல்லும் பாதையின் குறுக்கே உள்ள பள்ளத்தை கடப்பதற்கு பாலம் அமைக்க வேண்டுமென்றால் அங்கு வசிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
ஆண்டு தோறும் ஆசிாியா்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினை இந்த ஆண்டு ஆன்வைலன் மூலம் நடத்த முதல்வாின் ஒப்புதல் பெற்ற பின்னா் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாாா்.