கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி, வேலு நகரில் குடியிருந்து வருபவர் பார்த்திபன் இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
கடந்தவாரம் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று பார்த்திபன் வேலைக்கு சென்றநிலையில் அவரது மனைவி சர்மிளா, மகன்களுடன் பக்கத்து வீட்டு பெண் இருந்த நிலையில் 5 பேர்க்கொண்ட மர்மக்கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காண்பித்து சர்மிளா, பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கி தாளி,கம்மல் என 8.5 பவுன் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட சர்மிளா ஓசூர் சிப்காட் போலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுக்குறித்து விசாரணை தொடங்கிய சிப்காட் போலிசார் வழக்கமான விசாரணை மேற்க்கொண்ட நிலையில் கொள்ளையடிக்கப்பட்டு அன்று பக்கத்து வீடான பூமிகா என்னும் பெண்ணிடமும் விவசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
பூமிகாவின் காதில் இருந்த ஒருப்பக்க கம்மலை கொள்ளையர்கள் பறித்து சென்றதாக அவர் அளித்த வாக்குமூலம் போலிசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
ஒட்டுமொத்த போலிசாரின் கவனமும் பூமிகா மீது திரும்பிய நிலையில், பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் விசு வின் தமிழ் திரைப்படமான சிதம்பர ரகசியம் படத்தில் அமைந்திருக்கும் காட்சியானது வயதான பாட்டி ஒருவர் வேலைக்காக சில வீட்டுக்கு சென்று அந்த வீட்டில் யார் யார் உள்ளார்கள் என குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்து அதன் பிறகு அந்த வீட்டை கொள்ளையடிக்கும் போல சம்பவத்தை படமாக அமைத்திருப்பார் இயக்குனர் விசு அதேபோல் கன்னட சினிமாவான தண்டுபாள்யா என்கிற சினிமாவை நினைவுப்படுத்தியதாக போலிசாரே ஒருநிமிடம் திகைத்துள்ளனர்.
அந்த திரைப்படத்தில், வீட்டில் பெண்கள் இருப்பதை மட்டுமே அறிந்து கொள்ளைக்கும்பலில் உள்ள பெண் ஒருவர் தண்ணீர் கேட்பதாக உள்ளே நுழைந்ததும், பின்னாடியே கொள்ளைக்கும்பல் சென்று மனிதாபிமானமின்றி பெண்களிடம் நகைகளை பறித்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்து தப்பிவிடுவது போல் அமைந்திருக்கும் அதுப்போலவே,
சின்ன எலசகிரி வேலு நகரில் உள்ள
சர்மிளா குடும்பத்தாரை பக்கத்து வீட்டில் இருந்த கொள்ளைக்கும்பலின் தலைவி பூமிகா நீண்ட நாட்களாக நோட்டமிட்டு சம்பவத்தன்று மதியம் பூமிகாவின் சுடிதார் கிழிந்து விட்டது அதனை தைத்து தருமாறு சர்மிளா வீட்டிற்கு நுழைந்துள்ளார்.
பின்னர் வீட்டில் பிள்ளைகள், சர்மிளா மட்டுமே உள்ளதையறிந்து பெங்களூரை சேர்ந்த தனது கொள்ளைக்கும்பலுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள் பூமிகா மீது சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக அவரையும் தாக்கி, சர்மிளாவின் காதில் இருந்த கம்மலை அவர் கழட்டுவதற்கு முன்பாகவே வேகமாக கொள்ளைக்கும்பல் இழுத்ததில் அவரது காதுப்பகுதி காயம் ஏற்ப்பட்டுள்ளது பின்னர் கத்தியால் பிள்ளைகளை மிரட்டி 8.5 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.
முதற்கட்டமாக கொள்ளை கும்பல் பூமிகா, பிரசாந்த் ஆகியோரை கைது செய்த சிப்காட் போலிசார் மேலும் சஞ்சய்(25), புட்டராஜு(25), கிரண்(25) நாகராஜ்(23) 4 கொள்ளையர்களை கர்நாடக மாநிலத்திற்குள் சென்று அதிரடியாக கைது செய்து வந்துள்ளனர்.
6 பேரை கைது செய்துள்ள சிப்காட் போலிசார் அவர்களிடமிருந்து தங்கநகைகளை பறிமுதல் செய்து இவர்கள் மீது மற்ற மாநிலங்களில் அல்லது தமிழக காவல்நிலையங்களில் புகார் பதிவாகி உள்ளனவா எனவும் தீவிர விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் தன்மையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் அவர்களின் உத்தரவின்பேரில் ஓசூர் DSP. முரளி அவர்களின் ஆலோசனை படி நகையை கொள்ளையடித்து சென்ற ஒரு வாரத்துக்குள் தனிப்படை அமைத்து சாதுரியமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்ட ஓசூர் சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் கணேஷ் பாபு,SI. சுரேஷ், SI. அமர்நாத், SSl.காமராஜ்,SSI.கிருபாகரன், நாசில், ராமசாமி உள்ளிட்ட தனிப்படையினருக்கு SP.பண்டி கங்காதர் அவர்கள் பாராட்டினை தெரிவித்துள்ளார்.