புதுக்கோட்டையில் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை பிரம்மோற்சவ விழாவாக பத்து நாள் கொண்டாடப்பட உள்ளது இன்றிலிருந்து துவங்கி வருகின்ற 20 9 2020 வரை நாள்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளனதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் அவர்கள் தலைமையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது முதல் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அவருக்கு சால்வை அணிவித்து விழா துவங்கியது
இன்றைய விழாவில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மேலும் இந்த பத்து நாள் நலத்திட்ட உதவிகள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பொருள் வழங்குவது மற்றும் பாரத பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பொதுமக்களை இணைத்து அவர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்குவது மேலும் ரூபாய் 3000 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு அமைத்துக் கொடுப்பது கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு பண்ணை குட்டை அமைத்து கொடுப்பது பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வாங்கி தருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்