புதுக்கோட்டை நகராட்சி சார்பாக நடத்தப்படும் வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர் மேலும் பொதுமக்களின் கூட்டமும் வெகு குறைவாகவே காணப்படுகிறது
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த 5 மாத காலமாக அனைத்து விதமான பணிகளும் முடக்கப்பட்டுள்ளன
தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது
அதன்படி வார சந்தைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி புதுக்கோட்டை நகராட்சி சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தப்படும் வார சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியது ஐந்து மாதங்களுக்குப் பிறகு வாரசந்தை செயல்படத் தொடங்கினாலும் வியாபாரிகள் வெகு குறைவாகவே கடைகளை அமைத்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்
ஆனால் பொதுமக்களின் கூட்டம் வெகு குறைவாகவே காணப்படுகிறது
மேலும் கடந்த 5 மாத காலமாக வாரசந்தை மூடப்பட்டிருந்ததால் கடைகளுக்கு அருகே முள்புதர்கள் வளரத் தொடங்கியிருந்தன
அவற்றை நகராட்சி சார்பில் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டதால் வியாபாரிகள் கடைகளை அமைக்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாக வார சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் குப்பை கூளங்கள் மலைபோல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அடுத்த வாரத்திற்குள் வார சந்தை தூய்மைப்படுத்தி முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாவட்டத்தின் மிகப்பெரிய சந்தையாக புதுக்கோட்டை நகராட்சி சார்பாக நடத்தப்படும் வார சந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது