அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் போக்குவரத்து பணிமனை செல்லும் வழியில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட, நபார்டு திட்டத்தின் கீழ் 85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம் பாலுச்சாமி, சண்முகானந்தம், மோகன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் குருராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.