ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாதிரி பள்ளியை திறந்து வைத்து பேசியதாவது இந்தியாவில் தமிழகம் தற்போது பள்ளி கல்வித் துறையில் முதன்மை பெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகிறார். அதேபோல் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அரசுப் பள்ளி நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசு நிதியுதவி வழங்குவது போல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள்,
தன்னார்வலர்கள் மூலம் அரசு பள்ளிகளுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் உட்பட ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்கள் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர்
ஜி. கண்ணன்