நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர். கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் இந்த திட்டத்தினை பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்தார். அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தனர்.
நிகழ்வுகளின் போது மக்களிடம் பேசிய வானதி சீனிவாசன் சாலையோர வியாபாரிகளில் கடனுதவி வேண்டுமென்போர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் இது குறித்து சாலையோர வியாபாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஏதாவது குறைகள் இருப்பின் மக்கள் அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறினால் அதை விரைந்து முடித்து தர பாஜக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா