இதில் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் ஏதோ மோதியது போல் தெரிந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட மீனவர்கள் வலையை இழுக்க முயன்ற போது படகில் ஓட்டை ஏற்ப்பட்டு ஒட்டையின் வழியாக கடல் நீர் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது உடனடியாக அவர்கள் காலப்பட்டில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தொலைபேசியில் அழைத்து படகு பழுதடைந்ததை கூறி உள்ளனர் உடனடியாக வேறு படகில் சென்ற காலப்பட்டை சேர்ந்த மீன்வர்கள் பழுதடைந்த படகை கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர் ஆனால் கடல் நீர் அதிகமாக உள்புகுந்ததால் பழுதடைந்த படகு இரண்டாக உடைந்தது. ஆனாலும் உடைந்த படகையும் படகில் சென்ற மீனவர்களையும் பத்திரமாக காலாப்பட்டு கடற்கரையில் சேர்த்தனர். மேலும் சேதமடைந்த படகின் மொத்த மதிப்பு 35 லட்சம் ரூபாய் என தெரிவித்த மீனவர்கள், அரசு உடனடியாக தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.