இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறுகையில், புதுச்சேரியில் அதிகபட்சமாக 2,823 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 504 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 19,026 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3,136 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 1,742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை நிலையில் 13 ஆயிரத்து 783 (72.44 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை 92 ஆயிரத்து 904 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 71 ஆயிரத்து 196 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 19 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பல இறப்புகள் திடீரென நிகழ்ந்ததாக இருக்கின்றது.
இதற்கு காரணம், பலர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, எந்த வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என சென்று விசாரிக்குமாறு கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஆசிரியர்கள் தயார் செய்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் சென்றால் விழிப்புணர்வு ஏற்படும் எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தற்போது 19 ஆயிரத்தை கடந்துள்ளது. தினமும் 400 முதல் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருவதால் ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.