ஈரோடு மாவட்டம், பவானி- ஈரோடு மெயின் ரோட்டிலுள்ள அமராவதி நகரில் அரசு பஸ் மோதிய விபத்தில் மகள் இறந்தார். தாய் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
ஈரோடு, மூலப்பாளையம், மண்டபம் வீதியில் வசிக்கும் சிவசங்கர் மனைவி சுகன்யா சம்பவத்தன்று தனது ஹீரோ பிலேசூர் மொபட்டில் தனது மகள் ஹர்ஷிதா (வயது 11) பின்னால் ஏற்றிக்கொண்டு பவானி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டு இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள அமராவதி நகர் அருகில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் சுகன்யா ஓட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவரும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் தலை மற்றும் மூக்கில் பலத்த காயமடைந்த ஹர்ஷிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். தாய் சுகன்யா லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர்
ஜி. கண்ணன்