புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார் கூட்டத்தில் 22 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கியதும் ஊராட்சியின் மத்திய-மாநில நிதிக்குழுவின் விதியின் கீழ் முதல் தவணையாக ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றோம் மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முக்கிய விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு இக் கூட்டத்தில் ஒப்புதல் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி வேண்டுகோள் விடுத்தார் .
இதற்கு அதிமுக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் ஊராட்சி ஒன்றிய கூட்டங்களுக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அழைப்பதில்லை என்றும் அப்படியே அழைத்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றும் ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பகுதியில் மத்திய அரசின் பணிகள் என்ன நடைபெறுகிறது என்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் இந்த கூட்டம் பெயரளவில்தான் நடைபெறுகிறது என்றும் பல மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்து பேசினர். மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை குறைவாக இருக்கின்றது என்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மக்கள் நல பணிகளை முழுமையாக செய்ய முடியாது என்றும் இத் தொகை மிகக் குறைவாக இருக்கிறது என்றும் அதிக நிதி ஒதுக்கினால் தான் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மக்கள் நல பணிகளை அந்தந்த பகுதிகளில் செய்ய முடியும் என்றும் இல்லை என்றால் எங்களுக்கு மக்களிடையே அவப்பெயர் தான் வந்து சேரும் என்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர் பின்னர் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் விவாதங்களுடன் முடிவு பெற்றது.