திண்டுக்கல் மாநகராட்சி முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாருக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாரான நிலையில் தனது வீட்டில் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுவரை 16 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்தும் மன அழுத்தத்தின் காரணமாகவும் தோல்வி பயத்தாலும் தொடர்ந்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் ஆகவே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியானது மமக மாவட்ட தலைவர் பாரூக் தலைமையில், தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது ரிஜால், மாவட்ட துணை செயலாளர் ஷேக் பரீத், மாநில செயற்குழு உறுப்பினர் முஸ்தாக் சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் ஹாரூன் ரஷீத் முன்னாள் மாவட்ட நிர்வாகி யாசர் அரபாத் முன்னிலையில் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
ஜெ.ரியாஸ் கான்