மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்
இந்நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள மாணவ மாணவியர் திருச்சி இல் உள்ள தேர்வு மையங்களை உருவாக்கி இருந்தனர்
இன்று காலை நீட் தேர்வு எழுதுவதற்கு திருச்சி செல்ல இருந்த மாணவ மாணவிகளை வழியனுப்பும் விழா புதுக்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்டது
மேலும் 65 மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தான் வாடகைக்கு எடுத்து அவர்களை தங்களது சொந்த செலவில் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர் முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதும் போது பயம் இல்லாமல் எழுத வேண்டும் முதலில் தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து தெரியாத கேள்விகளுக்கு பதில் எழுதாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது மேலும் உளவியல் ரீதியான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கினார் இதன் பின்னர் அவர்கள் வாகனம் மூலமாக திருச்சிக்கு தேர்வு எழுதுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்