தமிழக முதல்வர் அறிவித்த 2000 மினி கிளினிக்குகள் தொடங்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் அடங்கிய மினி மருத்துவமனைகள் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் செயல்படும். புதுக்கோட்டையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சுகாதாரத்துறை மற்றும் பல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான்
முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதால் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது
கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்தவர்களில் 89 சதவீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
உயர்தர உயிர்காக்கும் கருவிகள் தமிழகத்தில் அதிகம் உள்ளது மேலும் சுகாதார கட்டமைப்புகள் நன்றாக உள்ளது
இறப்பு சதவீதத்தை 1.67 சதவீதமாக நாம் குறைத்துள்ளோம்
இதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது
கொரோனா நோயால் மட்டும் இறப்பவர்களின் சதவீதம் என்பது ஒட்டுமொத்த இறப்பில்பத்து சதவீதத்திற்கும் குறைவுதான்
இந்தியாவிலேயே rtpcr பரிசோதனை தமிழகத்தில்தான் அதிக அளவு செய்யப்படுகிறது ஒருநாளைக்கு 85 ஆயிரம் வரை சோதனை செய்யப்படுகிறது
அதிக அளவு பரிசோதனை செய்வதை ஐ சி எம் ஆர் உலக சுகாதார அமைப்பு ஆகியவை தமிழக அரசை பாராட்டுகிறது
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிறுநீரக சிகிச்சை புற்றுநோய் சிகிச்சை ஆகியவை நோய்களுக்கு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது
மேலும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் அறிவித்த 2000 மினி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டது
ஒவ்வொரு மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு பாரா மெடிக்கல் பணியாளர் ஆகியோர் இருப்பார்கள்
தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்
அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகள் சேவை நோக்கத்தோடு தான் செயல்பட வேண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இதுவரை நான்கு தனியார் மருத்துவமனைகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்