நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் முன்பு
நீட் தேர்வுவின் அச்சம் காரணமாக மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகெண்டார். இதனையடுத்து நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை அலுவலக நுழைவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தொடர்ந்து மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் நீட் தேர்வினை ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து போராட்டக்காரர்களை அறந்தாங்கி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போராட்டத்திற்க்கு மாவட்ட தலைவர்
அபுசாலிகு, மாவட்ட செயலாளர் கிரீன்முகமது ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாலர் அஜ்மல்கான், மாவட்ட செயலாளர் ஐகுபர்அலி, துணை செயலாளர்
ஐலீல்அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் அன்வர்பாட்ஷா, அஜ்மல்கான் என பலரும் கலந்துகொண்டனர்.