தமிழகம் முழுவதும் இன்று 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் ஏலகிரி தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல 23 அரசு பேருந்துகள்,10பள்ளி கல்லூரி,தனியார் பேருந்துகள் என 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெப்பத்தன்மை கண்டறியப்பட்டு கபசுர குடிநீர் வழங்கி பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழிகாட்டுதல் பேனர்கள் வைக்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் பாதுகாவலர்கள் மாணவர்களுக்கு சோதனை செய்து பதினோரு மணிக்கு காத்திருப்பு அறையில் பாதுகாப்புடன் அமர வைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத தயார் படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.
நீட் தேர்வுக்கான கேள்வி தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் உள்ளே கொண்டு செல்லப் பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு பாதுகாப்பு பணிக்காக திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் ஆகியோர் தலைமையில் 427 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அத்தியாவசிய பணிகளை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாணவர்களின் உடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்கு தேர்வு மையம் அருகே உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்பட்டு வருகின்றன.