புதுக்கோட்டையில் இன்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்
புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களை கண்டித்தும் கொரோனா பேரிடர் காலத்தில் பணியின்போது இறந்த பணியாளர்களுக்க ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது