திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சக்திவேல். இவர் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறார். சக்திவேல் குடியிருந்து வரும் வீட்டின் மாடியிலேயே காவலர் சக்திவேலுடைய அண்ணன் தண்டபாணி என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் தண்டபாணிக்கும், காவலர் சக்திவேலுக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்றுகாலை சக்திவேல் மற்றம் தண்டபாணி ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தண்டபாணி வீட்டில் வைத்திருந்த அரிவாளால் சக்திவேலை வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் கால் பகுதியில் வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து சக்திவேலை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சக்திவேலுடைய அண்ணன் தண்டபாணி பழனி நகர காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பழனி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துத் தகராறில் போலீஸ் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.