அந்தியூர் தேமுதிக ஒன்றிய கழகம் சார்பில், தேமுதிகவின் 16வது துவக்க விழாவை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராஜா சம்பத் முன்னிலையில், அத்தாணி கைகாட்டி, நல்லிகவுண்டன்புதூர், சின்னத்தம்பிபாளையம், தவிட்டுப்பாளையம், பர்கூர் மலைப்பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி ஏழை எளிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. முன்னதாக ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் அன்பரசு, நகர அவைத் தலைவர் முனாப், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் ஜாகீர் உசேன், நகர அவைத் தலைவர் முனாப், கழக பேச்சாளர் அந்தோணி, பேரூர் கழக இளைஞர் அணி பொறுப்பாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.