ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இரண்டு மாத ஊரடங்கிற்குப் பின் மே 25ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து விமானப் பயணிகளின் எண்ணிக்கையும், விமான சேவையும் கணிசமாக அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்த நிலையில், நேற்று 63 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டுச் சென்றன.
அதேபோன்று 63 விமானங்கள் சென்னையை வந்தடைந்தன. நேற்று ஒரே நாளில் இந்த விமானங்களில் 12 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்