நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா பேரிடருக்கு மத்தியில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14 முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து முதல் நாள் கூட்டத்தொடர் முடந்தது. இரண்டாம் நாளான இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சீனா எல்லை பிரச்சினை உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.