தேமுதிக கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு தேமுதிக கட்சியின் நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் மாவட்ட அவைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் தேமுதிக கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் திலகர் திடல் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பரமஜோதி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ் மனோகர் மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள் மாவட்ட பிரதிநிதிகள் ராமன் ரமண செல்வம் நகர துணைச் செயலாளர் சரவணன் வட்டச்செயலாளர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் முருகேசன் தியாகராஜன் பாலு சுப்ரமணியன் சேகர் ரமன பிரபு கமல்ஹாசன் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.