புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பிருந்தாவனத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்,, ராயல். முருகேசன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தர்மா. தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வீர ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
சிதம்பரம் நீடூடி வாழ வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீரையா, காதர் மொய்தீன், ் பழனியப்பன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மீரா ஊடக பிரிவு தலைவர் பாருக்கு மாவட்ட மகளிரணி சித்ரா கண்ணு நகர மகளிர் அணி கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதேபோன்று அரிமளம் திருமயம் பொன்னமராவதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ப. சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது