கோக்கு மாக்கு

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி

மறைந்த இயற்கை நல ஆர்வலர் மரம் தங்கசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கபடுவதை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் காவிரி கூக்குரல் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவெடுத்து இன்று முதற்கட்டமாக 1200 மரக்கன்றுகள் விவசாயிகளின் தோட்டத்தில் நடவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி. தனது வாழ்நாள் முழுவதும் மரம் நடுவதையே லட்சியமாகக் கொண்ட இவர் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்ததோடு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மரங்களின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் பத்து மரக்கன்றுகளையாவது நடவு செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு பயணித்த மரம் தங்கசாமி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கையை பேணிக் காக்கவும் தனது இறுதிக்காலம் வரை போராடினார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி உடல்நலக்குறைவால் மரம் தங்கசாமி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் தொடர்ந்து அவரது நினைவாக அவரது சொந்த ஊரான சேந்தன்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் பள்ளி கல்லூரி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள மேல முத்துக்காடு கிராமத்தில் ஈஷா யோகா மையத்தின் காவிரி கூக்குரல் திட்டத்தின்கீழ் விவசாயி பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் மரம் தங்கசாமி நினைவைப் போற்றும் வகையில் 1200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த விழாவில் மரம் தங்கசாமி யின் மகன் தங்க கண்ணன் மற்றும் ஈஷா யோகா மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பல இயற்கை நல ஆர்வலர்கள் பங்கேற்றனர்.இதேபோல் தமிழகம் முழுவதும் நாளை சந்தனம், செஞ்சந்தனம், ரோஸ்வுட்,குமிழ், வேம்பு,புங்கை உள்ளிட்ட ஒரு லட்சத்தி 25 ஆயிரம் மரக்கன்றுகள் ஈஷா யோகா மையத்தின் சார்பில் மரம் தங்கசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் தோட்டத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தனது வாழ்நாள் முழுவதும் மனம்போல் வாழாமல் மரம் போல் வாழ்ந்து பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மரம் தங்கசாமியின் நினைவைப் போற்றும் வகையில் ஈசா யோகா மையம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button