இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இ-பாஸ் பெற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர் மேலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக 3 பூங்காங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக பிரையண்ட் பூங்காவில் 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டு ஹைட்ரேஞ்சா பூக்களால் மயில் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது
மேலும் 4 அடி நீளம்,4 அடி அகலம் கொண்டு போடோகார்பரஸ் இலைகளால் தாஜ்மஹால் உருவம் உருவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது, சேண்டலின வகை பூக்களும்,ஹைரேசின் என்ற கீரை வகைகளால் இந்தியா வரைபடம் இதய வடிவம்,ஸ்டார் வடிவம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளது மயில்,தாஜ்மஹால் உள்ளிட்ட உருவங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்