திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கேணி கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடும்பம் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் நேற்று மாலை வாடிப்பட்டியில் இருந்து ஒரு காதல் ஜோடி இந்த கோவிலுக்கு வந்துள்ளனர். இதில்
கிரிவலப்பாதையில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.இதில்
கள்ளக் காதலி பேக்கில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை இருந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கழுத்தில் தங்க நகைகளும் அணிந்து இருந்தார்.இந்த பெண் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா வித்யா (வயது27), கணவர் பெயர் ஜெய்செந்தில்,நீரேத்தான், வாடிப்பட்டி என்று தெரியவந்தது.தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கூட வந்தவர் அவருடைய கணவரா? அல்லது கள்ளக் காதலரா?என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தத் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த சம்பவம் நடந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாகிறது.